தமிழ்நாடு

'அனுமதி பெறாத கட்டடத்தை இடிக்க வேண்டும்'

DIN

அனுமதியின்றி கட்டடம் கட்டினால் அதை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

அங்கீகாரமின்றி கட்டடம் கட்டலாம், பின்னர் அதிலுள்ள குறைபாடுகளை சரி செய்யலாம் என்பதை ஊக்குவிக்க கூடாது. சட்டவிதிகளை மீறி கட்டடங்கள் கட்டுவது தடையின்றி நடைபெறுகிறது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.

கட்டடத்தை ஆய்வு செய்து நிறைவு சான்று பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு தர வேண்டும் எனவும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை அதிகாரிகள் பின்பற்றவில்லை. அனுமதியின்றி குடியிருப்பு கட்டுயதற்கெதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுத்து நவம்பர் 10 ஆம் தேதிக்குள் அறிக்கை தர உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT