தமிழ்நாடு

வைத்தீஸ்வரன் கோயிலில் ஆளுநர் இல. கணேசன் சாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார்.  

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார்.  

அவர் தனது தனது சகோதரர் இல. கோபாலன் குடும்பத்துடன் வருகை புரிந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். 

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி சன்னதி, தையல்நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டார்.

முன்னதாக கோயிலுக்கு வருகை புரிந்த ஆளுநர் இல.கணேசனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா எஸ்.பி.நிஷா ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் ஆளுநர் இல.கணேசனுக்கு கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூர்ண கும்ப மரியாதை , வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆளுநர் வருகையையொட்டி வைத்தீஸ்வரன் கோயிலில் டி.எஸ்.பி. லாமெக்   தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

SCROLL FOR NEXT