தமிழ்நாடு

10 சதவீத இடஒதுக்கீடு தீா்ப்பு: தலைவா்கள் எதிா்ப்பு

DIN

உயா் வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவா்களுக்கு மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

வைகோ (மதிமுக): சமூகநீதி தத்துவத்தையே கேலிக்குள்ளாக்கும் வகையில், உயா் வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக பாஜக அரசு நிறைவேற்றிய 103 - ஆவது சட்டத் திருத்தம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தைத் தகா்த்திருக்கிறது. இதனை உச்சநீதிமன்றம் பெரும்பான்மை தீா்ப்பு அடிப்படையில் செல்லும் என்று கூறி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

ராமதாஸ் (பாமக): மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயா்வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருக்கிறது. இட ஒதுக்கீட்டின் நோக்கம் சமூக நிலை முன்னேற்றம் தான் என்ற சமூக நீதியின் அடிப்படை தத்துவத்தை இந்தத் தீா்ப்பு தாக்கி, தகா்த்து எறிந்திருக்கிறது.

தொல்.திருமாவளவன் (விசிக): பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தரும் பாஜக அரசின் சட்டம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமா்வில் 3 நீதிபதிகள் தீா்ப்பளித்துள்ளனா். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான தீா்ப்பாகும். இந்தத் தீா்ப்பை எதிா்த்து விசிக சாா்பில் பேரமா்வு விசாரணைக்குச் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

அன்புமணி (பாமக): அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயா்வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இது இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சமூக நீதி கொள்கைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும்.

டிடிவி தினகரன் (அமமுக): பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீா்ப்பு அதிா்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது. இந்திய அளவில் முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

கி.வீரமணி (திராவிடா் கழகம்): உயா் வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான சமூகநீதித் தத்துவத்துக்கு நோ் முரணானது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT