முகப்பு
தமிழ்நாடு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி

உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:46 AM
பகிர்:


உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,  மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில்  உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு  ஏமாற்றமளிக்கிறது. இது இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் சமூக நீதி கொள்கைகளுக்கு பெரும் பின்னடைவை  ஏற்படுத்தி விடும்!

இந்தியா சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடு.  அவற்றைக் களைய வேண்டுமானால் சமூக நிலையின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சமூக நிலைக்கு பதிலாக பொருளாதார நிலையை சமூகநீதிக்கான அளவீடாகக் கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது!

Advertisement

மனிதர்களின் பொருளாதார நிலை என்பது  ஆண்டுக்கு ஆண்டு மாறுபடக் கூடியது ஆகும். அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வறுமை ஒழிப்பு நடவடிக்கையாகத் தான்  இருக்குமே, சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான  சமூகநீதியாக  இருக்காது!

காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த  பட்டியலின, பழங்குடியின, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதி இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்படும் நிலையில்,  அதை போக்குவதற்காக  நடவடிக்கைகள் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்; அவற்றை பாமக ஆதரிக்கும் என்று அன்புமணி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments