முகப்பு
தமிழ்நாடு

காலமானார் எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன்

எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (நவ.7) அதிகாலை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

Updated On : 7 நவம்பர் 2022, 6:34 pm IST
விழி.பா. இதயவேந்தன்.
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் நித்தியானந்தம் நகரைச் சேர்ந்தவரும், எழுத்தாளருமான விழி.பா. இதயவேந்தன் (60) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (நவ.7) அதிகாலை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

நந்தனார் தெரு என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகில் அறியப்பட்டவர் இதயவேந்தன். 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், தமிழக அரசின் குறள்பீட விருதைபெற்றவர். தலித் இலக்கிய முன்னோடியாக அறியப்பட்ட இதயவேந்தன் விழுப்புரம் நெம்புகோல், தென்பெண்ணை, மருதம் அமைப்புகளில் செயற்பாட்டாளராக திகழ்ந்தார்.

இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாலையில் அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

Advertisement

Advertisement

மறைந்த விழி. பா. இதயவேந்தனுக்கு மனைவி விஜயலட்சுமி, மகள்கள் அஜிதாபாரதி, சாருமதி, மகன் சூரியதீபன்  உள்ளனர். தொடர்புக்கு- 8056122852.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.