முகப்பு
தமிழ்நாடு

மாலை 6 மணிவரை எங்கெல்லாம் மழை பெய்யும்?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாலை 6 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

மாலை 6 மணிவரை எங்கெல்லாம் மழை பெய்யும்?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாலை 6 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:47 AM
பகிர்:

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாலை 6 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. கடந்த இரண்டு நாள்களாக சென்னை மற்றும் புறநகரில் மழை சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று காலை முதல் அங்கங்கே கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், மாலை 6 மணிவரை பல்வேறு இடங்களில் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாலை 6 மணிக்குள் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர்,  குன்றத்தூர் பகுதிகளில் மிதமான மழையும், செங்கல்பட்டு, வாலாஜாபாத், குன்றத்தூர், மதுராந்தகம், உத்திரமேரூர் பகுதிகளில் லேசான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவொற்றியூர், செய்யூர், பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →