தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!
அதிகம் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிகம் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் அதிகம் கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது,
மேலும், கட்டண நிர்ணய குழு அறிவித்த கட்டணத்துக்கு அதிகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என்றும், அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
அனைத்து சுயநிதி நிறுவனங்களும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: நவ. 11ல் காங்கிரஸ் நடைப்பயணத்தில் சரத் பவார் பங்கேற்கிறார்!
சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.