தமிழ்நாடு

சென்னை மக்களே தயாரா? வெளுத்து வாங்கப்போகும் மழை!

DIN

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 5 நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, அதையொட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்தாண்டு மழைப் பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

இன்று வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவ. 11, 12ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி பெய்த கனமழையிலிருந்து சென்னை சற்று மீண்ட நிலையில், மீண்டும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT