முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு!
ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடுமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு!
ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், அமைச்சர் முத்துச்சாமி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்டம் செல்வராஜ் எம்எல்ஏ, உள்ளிட்ட பலரும் முதல்வரை வரவேற்றனர்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் முத்துசாமி, மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் முதல்வரை வரவேற்றனர்.
பின்னர் கடந்த அக்டோபர் 12-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த திமுகவைச் சேர்ந்த வால்பாறை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கோவை தங்கம் வீட்டிற்கு முதல்வர் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கோவை தங்கம் மார்ச் 2021-ல் திமுகவில் இணைந்தார். வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினராக 2 முறை இருந்தவர். கடந்த பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். கடந்த அக்டோபர் 12-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.