தமிழ்நாடு

தொடர் கனமழை: சென்னை மாநகராட்சி உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னையில் தொடர் கனமழை பெய்து வருவதால் சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.

DIN

சென்னையில் தொடர் கனமழை பெய்து வருவதால் சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னையில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த மழை இன்றும் தொடர்கிறது. 

இந்நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது. 

இதன்படி, 044- 25619206, 044- 25619207, 044- 25619208 என்ற உதவி எண்கள் மூலமாக பொதுமக்கள் சென்னை மாநகராட்சியை தொடர்புகொள்ளலாம். 

மேலும் நம்ம சென்னை செயல், சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் கணக்கு வழியாகவும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுபோல சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு உள்ளிட்ட புகார்களுக்கு 1913 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT