முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.12) விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:49 AM
கோப்புப் படம்
பகிர்:

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழையையொட்டி, கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்துள்ளதால் தமிழகத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வரை கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எனவே, வெள்ளிக்கிழமை தமிழகத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர். ஏற்கெனவே 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அந்த வகையில், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நீலகிரி, செங்கல்பட்டு, திருச்சி, பெரம்பலூர், சேலம், கரூர், தஞ்சாவூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பத்தூர், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம் ராமநாதபுர மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →