கோப்புப்படம் 
தமிழ்நாடு

10 சதவீத இடஒதுக்கீடு... அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறதா அதிமுக?

சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை (நவ.12) ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

DIN


பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தீா்ப்பு தொடா்பாக, மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் விவாதித்து முடிவு எடுக்கப்பதற்காக சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை (நவ.12) ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிராக அமைவதுடன், சமூக நீதிக் கொள்கைக்கும் மாறானதாகும். 

இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் விவாதித்து முடிவு எடுக்கப்பதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் வரும் சனிக்கிழமை (நவ. 12) காலை 10.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென சட்டப்பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளாா். பேரவையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தலா இரண்டு போ் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

நாளை நடைபெற உள்ள அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் கபட நாடகம் என விமர்ச்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT