தமிழ்நாடு

மக்கள் நீதிமன்றம்: காஞ்சிபுரத்தில் 542 வழக்குகளுக்கு ரூ.8.25 கோடிக்கு தீர்வு!

DIN

காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்டார சட்டப்பணிகள் குழுவின் சார்பில் மாவட்ட நீதிபதி(பொறுப்பு)எம்.இளங்கோவன் தலைமையில் தேசிய லோக்அதாலத் (மக்கள் நீதிமன்றம்) சனிக்கிழமை கூடியது. இதில் 542 வழக்குகள் ரூ.8.25 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. 

காஞ்சிபுரம் வட்டார சட்டப்பணிகள் குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் கூடியது. மாவட்ட நீதிபதி(பொறுப்பு) எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி பி.சிவஞானம், கூடுதல் சார்பு நீதிபதி பி.திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் சங்க தலைவர் எஸ்.ஜான் வரவேற்றார். 

இந்நீதிமன்றத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த சிவகங்கை மாவட்டம் வேளாரேந்தல் கிராமத்தை சேர்ந்த பொறியாளர் வினோத்குமார்(24) மீது தனியார் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் இழப்பீட்டுத் தொகையாக ரூ.19 லட்சத்துக்கான காசோலையினை வினோத்குமாரின் தந்தை சக்திவேலிடம் மாவட்ட நீதிபதி(பொறுப்பு) எம். இளங்கோவன் வழங்கினார்.

மக்கள் நீதிமன்றத்தில் வங்கி வராக்கடன் வழக்கு, விபத்து வழக்கு, காசோலை வழக்கு உட்பட மொத்தம் 542 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.8.25 லட்சம் மதிப்பிலான இழப்பீட்டுத்தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் ஆர்.ராஜேஸ்வரி, சரண்யா செல்வம், ஜெ.வாசுதேவன், வழக்குரைஞர் சங்க தலைவர் பி.ரமேஷ், அரசு வழக்குரைஞர் சத்தியமூர்த்தி, பத்மநாபன், ஹரிஹரன், துரைமுருகன், கார்த்திகேயன் உள்பட வழக்குரைஞர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT