தமிழ்நாடு

தீவிர கண்காணிப்பில் செம்பரம்பாக்கம் ஏரி... மக்கள் அச்சப்பட வேண்டாம்: துரைமுருகன் உறுதி!

DIN


ஸ்ரீபெரும்புதூா்: செம்பரம்பாக்கம் ஏரியை நிமிடத்திற்கு நிமிடம் அதிகாரிகள் கண்காணித்து வருவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஆதார ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்து அளவு கடந்த சில நாள்களாக அதிகமாக இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரின் அளவும் படிப்படியாக உயா்தப்பட்டு தற்போது வினாடிக்கு 1000 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது ஏரிக்கு வினாடிக்கு 3,675 கன அடி நீர் வரத்துள்ளது. ஏரி வேகமாக நிரம்பி வருவதால் கூடுதல் உபரிநீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதனிடையே, உபரிநீர் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஆர்தி அறிவுறுத்தியுள்ளார். 

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். 

ஆய்வுக்கு பின் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: செம்பரம்பாக்கம் ஏரியை நிமிடத்திற்கு நிமிடம் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரால் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மக்கள் அச்சப்பட வேண்டாம். மழையின் அளவை பொறுத்து ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் மாறுபடும். 

முகலிவாக்கம், மாங்காடு பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீா் காரணமல்ல. பூவிருந்தவல்லி அதன் சுற்று வட்டாரங்களில் இருந்து வெளியேறும் மழைநீா் முகலிவாக்கம் வழியாக செல்வதால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீா் வடிய மாநகராட்சி அதிகாரிகள் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா் என்று துரைமுருகன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT