தமிழ்நாடு

மீரா மிதுன் தலைமறைவு: லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு!

கடந்த 2 மாதங்களாக நடிகை மீரா மிதுன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். 

DIN

கடந்த 2 மாதங்களாக நடிகை மீரா மிதுன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். 

மீரா மிதுன் விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் நடிகை மீரா மிதுன் தலைமறைவான விவகாரம் : லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு

நடிகை மீரா மிதுனை மீட்டுத் தரும்படி சென்னை பெருநகரக் காவல் ஆணையரகத்தில் அவரது தயாா் சனிக்கிழமை மனு அளித்தாா்.

சென்னையைச் சோ்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் கடந்த ஆண்டு பட்டியலினத்தவா் குறித்து அவதூறாகப் பேசி விடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் மீரா மிதுன் தலைமறைவாகி விட்டாா்.

இதனிடையே, தன் மகளை பாதுகாப்பாக மீட்டுத்தரும்படி, நடிகை மீரா மிதுனின் தாயாா் ஷியாமளா, சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தார். 

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக மீரா மிதுனை போலீசார் தேடியும் கிடைக்காத நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்மூலமாக மீரா மிதுன் இந்தியாவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்படுவார். நாட்டை விட்டு எங்கும் செல்ல முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT