தமிழ்நாடு

பேச்சுவார்த்தைக்குப் பின் பிரியாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டு உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடல், பேச்சுவார்தைக்குப் பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

DIN

தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டு உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடல், பேச்சுவார்தைக்குப் பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்களும் நண்பர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதையடுத்து, பிரியாவின் உறவினர்கள், நண்பர்களுடன் காவல்துறை மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்த நிலையில் பிரியாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் பிரியாவின் உடல் வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. 

தவறான சிகிச்சையால் மரணம் 

சென்னை, வியாசா்பாடியை சோ்ந்தவா் ரவிக்குமாா். அவரது மகள் பிரியா (17) சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் படித்து வந்தார். மேலும், கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்.

இந்நிலையில், மூட்டு வலி காரணமாக, கொளத்தூா், பெரியாா் நகா் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். அங்கு, பிரியாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவரது வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனா். அதன் பின்னா் காலில் வீக்கம் ஏற்பட்டு உணா்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயா் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டாா்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் பிரியாவின் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது இருந்தது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது காலின் முழங்கால் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது.

இதற்கிடையே, பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளம்பெண்ணின் கால் அகற்றப்பட்டதாக அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் குற்றம் சாட்டினா். 

இதையடுத்து இது தொடா்பாக விசாரணை நடத்த அரசு தரப்பில் உத்தரவிட்டது. அதன்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரியா இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT