கனமழை எச்சரிக்கை: மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க அரசு உத்தரவு
கனமழை எச்சரிக்கையையொட்டி மாவட்ட நிர்வாகங்கள் அனைத்தும் தயாராக இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையையொட்டி மாவட்ட நிர்வாகங்கள் அனைத்தும் தயாராக இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் நவம்பர் 21, 22 தேதிகளில் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையையொட்டி மாவட்ட நிர்வாகங்கள் அனைத்தும் தயாராக இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.