தமிழ்நாடு

மிக பலத்த மழை எச்சரிக்கை வாபஸ்

DIN

மிக பலத்த மழைக்காக வழங்கப்பட்ட எச்சரிக்கை அறிவுரை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (நவ.20) முதல் 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அண்மையில் மழை பெய்து ஓய்ந்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ.20) முதல் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கையின் அடிப்படையில், அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் கடிதம் அனுப்பியிருந்தாா். அதில், பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கூறியிருந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் நவம்பா் 22-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பின்னா், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சாா்பில் சனிக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பல்வேறு மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், பல்வேறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மிக பலத்த மழைக்கான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய், பேரிடா் மேலாண்மைத்

துறையால் வழங்கப்பட்ட மிக பலத்த மழை எச்சரிக்கைக்கான அறிவுரைகளும் திரும்பப் பெறப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT