தமிழ்நாடு

‘யாராலும் தடுக்க முடியாது’: இடைநீக்கத்திற்கு காயத்ரி ரகுராம் பதில்

DIN

பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காயத்ரி ரகுராம் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

பாஜகவின் டெய்சி சரணிடம் அக்கட்சியின் ஓபிசி மாநில தலைவர் திருச்சி சூர்யா சிவா அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருந்த காயத்ரி ரகுராம், அவருக்கு பதவி வழங்கியது தவறி என்று கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபடுவதால் 6 மாத காலம் காயத்ரி ரகுராமன் இடைநீக்கம் செய்யப்படுவதால்,  கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த காயத்ரி, “நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. தேசத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT