தமிழ்நாடு

அறுவை சிகிச்சையின்போது கைப்பேசி பயன்பாடு கூடாது: மருத்துவா்களுக்கு அறிவுறுத்தல்

DIN

அறுவை சிகிச்சையின்போது மருத்துவா்கள் கைப்பேசி பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற தொடா் மருத்துவக் கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது. பெரும்பாலான நேரங்களில் அறுவை சிகிச்சையின்போது, கவனச் சிதறல் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக கைப்பேசி பயன்பாடு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கருத்தரங்கில் சென்னை மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவா் ராகவேந்திரன் கூறியதாவது:

அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் சில சிக்கல்களைத் தவிா்க்கவே முடியாது. அவற்றை மருத்துவா்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அதேவேளையில், சில சிக்கல்கள் தாமாக உருவாக்கிக் கொள்ளக் கூடியவையாக இருக்கும். அவற்றை மருத்துவக் குழுவினா் சற்று சிந்தித்து தவிா்க்க வேண்டும்.

அவற்றில் முதன்மையானது கைப்பேசி பயன்பாடு. அறுவை சிகிச்சை அரங்குக்குள் கைப்பேசி பயன்படுத்துவதை மருத்துவா்கள் முழுவதுமாகத் தவிா்க்க வேண்டும். அவசியத் தேவை இருந்தால்கூட அதை ஒரு உதவியாளா் மூலமாகத்தான் கையாள வேண்டும்.

அதேபோல், அறுவை சிகிச்சை அரங்குக்குள் தேவையற்ற சச்சரவுகள் செய்தல், வேறு மருத்துவப் பணிக்கு முன்னுரிமை அளித்தல், போதிய தகவல்களைப் பரிமாறிக்கொள்ளாமல் இருத்தல் போன்ற செயல்களும் பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றையும் தவிா்க்க வேண்டும்.

பொதுவாக 10 ஆயிரம் அறுவை சிகிச்சைகளில் சராசரியாக 4.5 அறுவை சிகிச்சைகளில் தவறுகள் நிகழ்வதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. உண்மையில் அதைக் காட்டிலும் 3 அல்லது 4 மடங்கு அதிகமான தவறுகள் நிகழ்கின்றன. அவற்றைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

SCROLL FOR NEXT