முகப்பு
தமிழ்நாடு

அமைச்சரவையில் இடம்: முதல்வா் முடிவு செய்வாா்: உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சரவையில் தனக்கு இடமளிப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:57 AM
உதயநிதி ஸ்டாலின்
பகிர்:

தமிழக அமைச்சரவையில் தனக்கு இடமளிப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

அவா் தனது 45-ஆவது பிறந்த தினத்தை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினாா். இதையொட்டி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் பங்கேற்றாா்.

அப்போது, அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு உதயநிதி அளித்த பதில்:

மக்கள் பணி செய்வதையே உறுதி மொழியாக எடுத்து இருக்கிறேன். பிறந்த நாளை முன்னிட்டு, தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறோம். திமுக இளைஞா் அணிச் செயலாளராக மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சராகப்

போகிறேன் என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சொல்லி வருகிறாா்கள். அது குறித்து திமுக தலைவா் (முதல்வா் மு.க.ஸ்டாலின்) தான் முடிவு எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →