தமிழ்நாடு

காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயிலுக்கு திடீர் பூட்டு!

காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோவிலுக்கு திடீரென பூட்டு பூட்டப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

DIN

காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயிலுக்கு திடீரென பூட்டு பூட்டப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகர் விஷ்ணுகாஞ்சி பகுதியில் உள்ளது தும்பவனத்து அம்மன் கோயில் . இத்திருக்கோயிலில் உள்ள தும்பவனத்தம்மன் பலருக்கும் குல தெய்வமாக உள்ளது. திருக்கோயிலில் இன்று சாமி கும்பிட வந்த பக்தர்கள் திடீரென கோயிலில் இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டு இருப்பதால் அதிர்ச்சி அடைந்தனர்.

சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் சுமார் 4 மணி நேரமாக கோயில் முன்பாக காத்திருந்தனர். இது குறித்து திருக்கோயில் நிர்வாகிகளில் ஒருவரான குணசீலன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நான்கு மணி நேரம் ஆகியும் காவல்துறையினர் அல்லது அறநிலையத்துறையினரோ வராமல், சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக பக்தர்கள் நீண்ட நேரம் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் கோயிலுக்கு முன்பாகவே காத்திருந்தனர். 

இதை குறித்து அறநிலையதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் திருக்கோயில் நிர்வாகம் மாற்றப்பட்டு அவர்கள் கோயில் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

எனவே விரைவில் அதிகாரிகள் வந்து திருக்கோயிலிலை திறந்து பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றார்கள். ஆனால் நான்கு மணி நேரம் ஆகியும் காவல்துறையினரோ, அறநிலையத்துறையினரோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT