தமிழ்நாடு

சீன பயணிகளுக்கு கரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

DIN

சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்வது பற்றி மத்திய அரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,  சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்வது பற்றி மத்திய அரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும். விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்க தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 10,000 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகளில் அவலங்கள் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதல்ல. நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தருவார் என காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

சீனாவில் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. அதையடுத்து, நாடு முழுவதும் பொதுமக்களுக்கு கூட்டம் கூட்டமாக தினசரி கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT