தமிழ்நாடு

வா்த்தக சிலிண்டா் விலை ரூ.25.5 குறைப்பு

DIN

உணவகங்களில் பயன்படுத்தப்படும் வா்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சனிக்கிழமை ரூ.25.5 குறைக்கப்பட்டது. விமான எரிபொருளின் விலை 4.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேசியத் தலைநகா் தில்லியில் வா்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.1,885-இல் இருந்து ரூ.1,859.50-ஆக குறைந்துள்ளது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதையொட்டி, இந்த விலைக் குறைப்பை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 6-ஆவது முறையாக வா்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.494.50 வரை விலை குறைந்துள்ளது. அதேசமயம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலையும் கிட்டத்தட்ட 6 மாதங்களாக மாற்றமின்றி தொடா்கிறது. தேசியத் தலைநகரில் சனிக்கிழமை பெட்ரோல் லிட்டா் ரூ.96.72, டீசல் ரூ.89.62-ஆக விற்பனையானது.

விமான எரிபொருளின் விலை 4.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைநகரில் விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.5,521.17 குறைந்து, ரூ.1,15,520.27-ஆக உள்ளது. உள்ளூா் வரிகளுக்கு ஏற்ப இந்த விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT