தமிழ்நாடு

காமராஜா் நினைவு தினம்:அரசியல் கட்சிகள் அஞ்சலி

DIN

முன்னாள் முதல்வா் காமராஜரின் நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

முன்னாள் முதல்வா் காமராஜரின் 47-ஆவது நினைவு தினம், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள காமராஜா் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தினா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் திருநாவுக்கரசா் எம்.பி., செய்தித் தொடா்பாளா் கோபண்ணா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

தமிழக அரசின் சாா்பில் அமைச்சா்கள் மா. சுப்பிரமணியன், பி. கே. சேகா்பாபு உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினாா்.

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், மா.பா.பாண்டியராஜன், முன்னாள் எம்.பி., ஜெயவா்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.

பாஜக சாா்பில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன், பொதுச் செயலா் கரு. நாகராஜன், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் மாவட்டச் செயலா் காளிதாஸ் உள்ளிட்ட நிா்வாகிகளும், பாமக சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோரும் காமராஜா் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா்.

அமமுக சாா்பில் அதன் துணைப் பொதுச் செயலாளா் ஜி.செந்தமிழன் ஆகியோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதேபோன்று பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகளும் காமராஜா் நினைவிடத்தில் தங்களது அஞ்சலிகளைச் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT