தமிழ்நாடு

அரசின் சிறப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா?

தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

DIN



தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு சார்பில் கல்வி, வேளாண்மை, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலே மக்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அரசு அறிவித்துள்ள அனைத்து சிறப்புப் திட்டங்களும் மக்களைச் சென்றடைந்துள்ளதா என்பது குறித்து மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்வதற்காக 30 அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிக்க | ‘இஞ்சி டீ’ குடல்வாழ் கிருமிகளைக் காக்குமா?  
 
இவர்கள் சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள், தரவுகள் குறித்து மாவட்ட வாரியாக கண்காணிப்பு செய்து ஆராய வேண்டும். 

மேலும், மாதத்தில் நான்கு நாள்கள் கள ஆய்வு செய்ய வேண்டும். அரசின் திட்டங்கள் உரிய பயனாளர்களை சென்றடைந்ததா, திட்டங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

அஞ்சனக்கண்ணி... அனுமோல்!

SCROLL FOR NEXT