தமிழ்நாடு

குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம்-நீக்கம்: நாளை குறைதீா் முகாம்

 குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம், நீக்கம் செய்திட சென்னையில் சனிக்கிழமை (அக். 8) குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

DIN

 குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம், நீக்கம் செய்திட சென்னையில் சனிக்கிழமை (அக். 8) குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழக உணவுத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பொது மக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளா் அலுவலகங்களில் வரும் சனிக்கிழமை (அக். 8) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, எண்ணை மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை ஆகியவற்றைக் கோரி மனுக்களைப் பதிவு செய்யலாம்.

நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வர முடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகாா்கள் ஏதாவது இருந்தால் அவற்றை பொது மக்கள் தெரிவிக்கலாம் என்று உணவுத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மருத்துவமனை சீா்கேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்!

மன்னாா்குடி கோயிலில் இன்று குடமுழுக்கு!

திமுக கூட்டணியில் குழப்பம்: நயினாா் நாகேந்திரன்

முதல் நாளில் இந்தியர்களுக்கு ஏமாற்றம்

மகாத்மா காந்தி பெயரிலேயே தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டம் தொடர கிராம சபைக் கூட்டங்களில் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT