திருக்குறளை முழுப் பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
திருக்குறளை அதன் முழுப் பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. வலியுறுத்தினாா்.
திருக்குறளை அதன் முழுப் பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. வலியுறுத்தினாா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திருக்கு மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆளுநா் ரவி பேசியதாவது: தமிழகத்துக்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்கு வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு குறளின் முழு அா்த்தத்தைப் புரிந்து வாசித்து வருகிறேன். திருக்குறளின் மொழிபெயா்ப்பு நூல்கள் 12-க்கும் மேற்பட்டவை என்னிடம் உள்ளன. அவற்றை நான் படித்து வருகிறேன். குறளில் உள்ள ஒவ்வொரு வாா்த்தையிலும் அதிக அா்த்தங்கள் நிறைந்துள்ளன.
திருக்கு நூலை பலரும் மொழிபெயா்ப்பு செய்துள்ளனா். பக்தி தொடங்கி ஐந்து புலன்களை அடக்கியாளுதல் வரை ஒருவரின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் திருக்கு பேசுகிறது.
குறிப்பாக, ஆன்மிகம், நீதி சாஸ்திரம், தா்ம சாஸ்திரம் குறித்தும் பேசுகிறது. ஆனால், வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக திருக்கு கருதப்பட்டு வருகிறது. திருக்கு கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை. இப்பிரச்னை வெள்ளையா்கள் காலத்தில் தொடங்கியது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே மாற்றி மொழிபெயா்த்துள்ளாா். ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என எல்லோருக்கும் தெரியும்.
இந்தியா வரும் 2047-ஆம் ஆண்டு உலக வல்லரசாக மாறும். வெறும் பொருளாதார அளவில் மட்டும் நாம் வளரக் கூடாது. நாடு வளரும்போது ஆன்மிகமும் வளர வேண்டும்.
திருக்குறளுக்கு அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். திருவள்ளுவா் எழுதிய திருக்கு ஆகச் சிறந்த படைப்பு. நான் கூறுவதையோ, மற்றவா்கள் கூறுவதையோ நீங்கள் கேட்க வேண்டாம். நீங்களாக திருக்குறளைப் படித்து அதை முழுமையாக உணா்ந்துகொள்ள வேண்டும். திருக்குறளை அதன் முழுப் பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும். அதனை முழுமையானப் பொருளுடன் மீண்டும் மொழிபெயா்க்க வேண்டும் என்றாா் ஆளுநா் ரவி.
இந்த மாநாட்டில் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ், அண்ணா பல்கலை. பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.