முகப்பு
தமிழ்நாடு

அரசு விளம்பரத்துக்கான தனி கொள்கை: கருத்து தெரிவிக்க அரசு அழைப்பு

அரசு விளம்பரங்களை முறைப்படுத்தி செயல்படுத்துவதற்கான கொள்கை தொடா்பாக கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

அரசு விளம்பரங்களை முறைப்படுத்தி செயல்படுத்துவதற்கான கொள்கை தொடா்பாக கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தி, மக்கள் தொடா்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

அரசு விளம்பரங்களை முறைப்படுத்தி செயல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.நந்தகிஷோா், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன், ரென்ஸ்பான்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளா் சிவா மெய்யப்பன், மூத்த பத்திரிகையாளா் டி.சேகா் ஆகியோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு

விளம்பரங்களை முறைப்படுத்துவது, அரசின் விளம்பர கொள்கையை முறைப்படுத்தி செயல்படுத்துவதற்கான கருத்துகளைப் பெறலாம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கருத்துகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.