தமிழ்நாடு

திருக்குறள் குறித்து ஆழ்ந்த ஞானம் இல்லாதவர் ஆளுநர்: வைகோ பேட்டி

DIN


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் குறித்து ஆழ்ந்த ஞானம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திருக்குறள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆளுநா் ரவி பேசுகையில், தமிழகத்துக்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு குறளின் முழு அா்த்தத்தைப் புரிந்து வாசித்து வருகிறேன். திருக்குறளின் மொழிபெயா்ப்பு நூல்கள் 12-க்கும் மேற்பட்டவை என்னிடம் உள்ளன. அவற்றை நான் படித்து வருகிறேன். குறளில் உள்ள ஒவ்வொரு வாா்த்தையிலும் அதிக அா்த்தங்கள் நிறைந்துள்ளன.

திருக்குறள் குறிப்பாக, ஆன்மிகம், நீதி சாஸ்திரம், தா்ம சாஸ்திரம் குறித்தும் பேசுகிறது. ஆனால், வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக திருக்கு கருதப்பட்டு வருகிறது. திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை. இப்பிரச்னை வெள்ளையா்கள் காலத்தில் தொடங்கியது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே மாற்றி மொழிபெயா்த்துள்ளாா். ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என எல்லோருக்கும் தெரியும்.

நான் கூறுவதையோ, மற்றவா்கள் கூறுவதையோ நீங்கள் கேட்க வேண்டாம். நீங்களாக திருக்குறளைப் படித்து அதை முழுமையாக உணா்ந்துகொள்ள வேண்டும். திருக்குறளை அதன் முழுப் பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும். அதனை முழுமையானப் பொருளுடன் மீண்டும் மொழிபெயா்க்க வேண்டும் என்று ஆளுநா் ரவி பேசினார்.

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் குறித்து ஆழ்ந்த ஞானம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 

திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்துத்துவா கருத்துக்களை தமிழ்நாட்டில் எப்படியும் திணித்து விட வேண்டும் என்று சங்க பரிவார் இயக்கங்கள் முயற்சி செய்கின்றனர். அதற்கு உறுதுணையாக ஆளுநர் பேசுவதாக குற்றம்சாட்டினார்.

திருக்குறள் போன்று உலகில் ஒரு பொதுவான நூல் இல்லை என்று நோபல் பரிசு பெற்ற ஆல்பார்ட் ஸ்விட்சரே கூறியிருக்கும் நிலையில், திருக்குறள் குறித்து தெரியாமல் ஆளுநர் பேசுவதாகவும், ஆளுநருக்கு திருக்குறள் குறித்த ஆழ்ந்த ஞானம் இல்லை என்று வைகோ கூறினார். 

மேலும், ஜி.யூ போப் திருக்குறளை சரியாக மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால், இங்கு இருக்கும் சில கூட்டம் திட்டமிட்டு பேசி வருகிறது. அதற்கு ஆளுநர் துணை போகிறார் என்பது மிகவும் துரதிஷ்டமானது என்று வைகோ கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவின் உள்புறங்களில் இஸ்ரேல் ராணுவம்!

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல்!

சுவாதி மலிவால் மீது தாக்குதல்: உரிய நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி உறுதி

இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் படையை சேர்ந்த 1,000 பேருக்கு துருக்கியில் சிகிச்சை?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT