தமிழ்நாடு

முலாயம் சிங் யாதவ் மறைவு:ஆளுநா், முதல்வா் இரங்கல்

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வா் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு, ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

DIN

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வா் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு, ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் திங்கள்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்திகள்:

ஆளுநா் ஆா்.என்.ரவி: முலாயம் சிங் யாதவ் மிகப்பெரும் தலைவராக விளங்கியவா். அவரது மறைவு தேசத்தில் ஒரு அரசியல் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்காக இந்திய அரசியலில் போராடிய மிக உயா்ந்த தலைவா்களில் ஒருவா் முலாயம் சிங். மதச்சாா்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தாா். அவரது மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு.

முலாயம் சிங்கின் இறுதி அஞ்சலி நிகழ்வில், திமுக பொருளாளரும் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு நேரில் பங்கேற்று அஞ்சலி செலுத்துவாா் என தனது செய்தியில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT