ஜெயக்குமார் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

'எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும்': முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

DIN

எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது:

மழைநீர் வடிகால் பணிகள் விரைவாக நடைபெறுகிறது. ஆனால் தரமான வகையில் அந்த பணிகள் நடைபெற வேண்டும். மழைநீர் வடிகால் விவகாரம் திமுக அரசுக்கு ஒரு பிரச்னையாக இருக்கும்.

ஒபிஎஸ் அதிமுக கட்சியிலேயே இல்லை. எனவே சட்டப்பேரவையில் அவருக்கு இடம் அளிக்கக் கூடாது. இது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து உள்ளோம். சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு இடம் ஒதுக்கினால் சபாநாயகர் அவரது மரபை மீறியதாக இருக்கும். திமுக மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது.

அமமுக உடன் அதிமுக என்றும் கூட்டணி வைக்காது. வேண்டுமானால் பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவுடன் அமமுக கூட்டணி வைத்துக் கொள்ளட்டும். பாஜக தான் உண்மையான எதிர்க்கட்சி என்று அண்ணாமலை கூறிகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT