சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.  
தமிழ்நாடு

தமிழக முதல்வருடன் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்திப்பு!

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். 

DIN

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். 

தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டம் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்ய மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சென்னை வந்துள்ளார். 

இதையடுத்து சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்தித்துப் பேசினார். 

பின்னர் மத்திய அமைச்சரின் தலைமையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உயிர் நீர் இயக்க திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் வினி மகாஜன் இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா இ.ஆ.ப., ஜல் ஜீவன் திட்டத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் திட்ட இயக்குநர் விகாஸ் ஷீல் இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது இ.ஆ.ப., தமிழ்நாடு உயிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT