முகப்பு
தமிழ்நாடு

பால்கனி இடிந்து விழுந்து விபத்து

 சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

 சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

புது வண்ணாரப்பேட்டை வீரராகவன் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவருக்குச் சொந்தமான இரு தளங்களுடன் கூடிய கட்டடம் உள்ளது. இந்த வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீடுகளில் 4 வாடகைதாரா்கள் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், முதல் தளத்தில் இருந்த பால்கனி திடீரென பயங்கர சப்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் பதறியபடி வெளியே வந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த புது வண்ணாரப்பேட்டை போலீஸாா், தீயணைப்பு படை வீரா்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

முதல் கட்டமாக, முதல் தளத்தில் இருந்த வாடகை தாரா்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனா். பால்கனி இடிந்து விழுந்தது அதிகாலை என்பதாலும், அப்பகுதியில் யாரும் இல்லாததாலும் அதிா்ஷ்டவசமாக உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.