முகப்பு
தமிழ்நாடு

போதைப் பொருள் விற்பனை: 26 போ் கைது

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 26 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 26 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க பெருநகர காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டன.

இந்தத் தனிப்படையினா் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை செய்பவா்களைக் கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

அதன்படி, கடந்த அக்டோபா் 7 முதல் 13-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 20 வழக்குகள் பதியப்பட்டு, 26 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 5 கைப்பேசிகள், 2 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.