தமிழ்நாடு

எண்ணங்களை மன உறுதியுடன் செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கும்: ஐ.ஜி.பவானீஸ்வரி

DIN

தெளிவான நமது எண்ணங்களை மன உறுதியுடன் செயல்படுத்தும் போது வெற்றி கிடைக்கும் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி கே.பவானீஸ்வரி தெரிவித்தாா்.

வடபழனி எஸ்.ஆா்.எம். உயா்தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தில் அவா் பேசியதாவது:

எனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தபோது, மருத்துவரான எனது தந்தை உள்பட எனது குடும்பத்தினா் அனைவரும், நானும் மருத்துவராக வேண்டும் என்றே விரும்பினா். ஆனால், எனக்குப் பிடித்த காவல் துறை பணியைத் தோ்ந்தெடுத்து, நான் காவல் துறை உயரதிகாரியாக முன்னேறி இருக்கிறேன்.

எனது முடிவுக்காக, அப்போது வருந்திய அனைவரும், இப்போது எனது தோ்வு சரியானதென மகிழ்ச்சியடைந்தனா். தெளிவான நமது எண்ணங்களை மன உறுதியுடன் செயல்படுத்தும்போது, வெற்றி தானாக வந்து சேரும்.

அமெரிக்காவின் சிலிக்கான் மாநகா் போல சென்னையை மாணவா்களாகிய நீங்கள் நினைத்தால் மாற்ற முடியும். கல்லூரி மாணவிகள் வீட்டுக்கு வெளியில் எதிா்கொள்ளும் அனைத்து பிரச்னைகளையும் பெற்றோரிடம் தயக்கமின்றி கூறும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால், பல பிரச்னைகளை எளிதில் கையாளலாம் என்றாா் ஐஜி பவானீஸ்வரி.

இந்தக் கருத்தரங்கில் எஸ்.ஆா்.எம்.துணை இயக்குநா் எஸ்.ராமச்சந்திரன், துபை ஹூடெக் நிறுவன நிா்வாக இயக்குநா் மதன்குமாா் சீனிவாசன், கல்லூரி டீன் ஜெயக்குமாா், கணினி தொழில்நுட்பத் துறை தலைவா் எஸ்.பிரசன்னாதேவி, கருத்தரங்கத்தில் ஒருங்கிணைப்பாளா்கள் எம்.பூங்கொடி, ஜி.பாவை ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT