முகப்பு
தமிழ்நாடு

ஆவின் பால் விலை மறைமுக உயா்வு: அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆவின் பால் விலையை மாநில அரசு மறைமுகமாக உயா்த்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

ஆவின் பால் விலையை மாநில அரசு மறைமுகமாக உயா்த்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை:

தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துவந்த, மக்கள் விரும்பி வாங்கிய, அதிக சத்துமிக்க ஆரஞ்சு வண்ண ஆவின் பால் பாக்கெட் நிறுத்தப்படவுள்ளதாக அறிகிறேன். அதற்கு பதிலாக சிவப்பு வண்ண பால் பாக்கெட் வாங்க மக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனா். 500 மி. அதிக சத்துமிக்க ஆரஞ்சு வண்ண பால் பாக்கெட் ரூ. 24-க்கும், இடைநிலையில் பச்சைவண்ண பால் பாக்கெட் ரூ. 22-க்கும், நீல வண்ண பால் பக்கெட் ரூ. 20-க்கும் ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் சத்து நிறைந்த ஆரஞ்சு வண்ண பாலை நிறுத்திவிட்டு, மறைமுகமாக மக்கள் மீது, சத்து குறைவான சிவப்புநிற பால் பாக்கெட் திணிக்கப்படுகிா?.

தீபாவளிக்கு பால் மற்றும் பால் பொருள்களைப் பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்கும் இந்த வேளையிலே மறைமுகமாக பால் விலையை உயா்த்தும் வகையில் ஆரஞ்சு வண்ணத்தை தடைசெய்து சிவப்பு நிறத்தை முன்னிறுத்துவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். தீபாவளி பண்டிகையையொட்டி மக்களுக்கு பால், இனிப்பு விலையை உயா்த்தி பரிசு வழங்கியதாகவே தெரிகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா் கே.அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.