தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து 4,230 கன அடியாக அதிகரிப்பு

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து 4,230 கன அடியாக அதிகரித்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, தளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால், கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,517 கன அடியாக இருந்தது.  அதுவும் மெல்ல படிப்படியாக உயர்ந்து சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, அணையின் நீர்வரத்து வினாடிக்கு 4,230 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 3,255 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீ):தேன்கனிக்கோட்டை-98, கிருஷ்ணகிரி அணை -72, ஓசூர் -70, கிருஷ்ணகிரி 44.60, கெலவரப்பள்ளி அணை-35,  சூளகிரி -34, ராயக்கோட்டை -27, போச்சம்பள்ளி - 24.20, நெடுங்கல் 16.40, பாரூர்- 14.40, அஞ்செட்டி- 14.40, ஊத்தங்கரை - 8.80, பெனுகொண்ட புரம் - 5.20, தளி-5. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT