தமிழ்நாடு

உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்: ஆட்சியர்களுக்கு கடிதம்

DIN


உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வறுமை, குடும்பை சூழல், நிதிப் பற்றாக்குறைஆல் தமிழ்நாட்டில் 6,718 மாணவர்கள் உயர்கல்வியை தொடரவில்லை.

மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக வரும் 20 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2021-22 ஆம் ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள்ள மற்றும் அவர்களது பெற்றோருக்கான வழிகாட்டல்சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முறையாக கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக தொடர் வகுப்புகள் நடத்தப்படும். முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நெறிப்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT