தமிழ்நாடு

நாளை எந்தெந்த ரயில் சேவையில் மாற்றம்? தெற்கு ரயில்வே அறிவிப்பு! 

பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

DIN


பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

அந்த ரயில்கள் விவரம்: 
தாம்பரம்-நாகர்கோவில் (வண்டி எண்:20691) இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா விரைவு ரயில் திங்கள்கிழமை (அக்.17) திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

மறுமார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அந்தியோதயா விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (அக்.18) நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.05 மணிக்கு இயக்கப்படும். 

செங்கோட்டை-மதுரை (06662) இடையே காலை 7 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (அக்.18) விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

மதுரை-செங்கோட்டை (06665) இடையே மாலை 5.15 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (அக்.18) மதுரை மற்றும் விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகரில் இருந்து மாலை 6.10 மணிக்கு இயக்கப்படும். 

நாகர்கோவில்-கோவை (16321) இடையே காலை 7.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (அக்.18) நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். 

மறுமார்க்கமாக கோவை-நாகர்கோவில் இடையே காலை 8 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (அக்.18) திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT