தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் மாநிலத் தலைவர் ராஜேந்திரன். 
தமிழ்நாடு

சேலத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

சேலம்: பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். 

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி விவசாயிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராடி வருகின்றனர். 

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்ற விவசாயிகள்.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பால் லிட்டர் ரூ.42 ஆகவும், எருமை பால் லிட்டர் ரூ.51 ஆகவும் உயர்த்தி தரவேண்டும். பிரதம பால் கூட்டுறவு சங்க பணியாளர்களை பணி வரன்முறை படுத்த வேண்டும். அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் அனைத்து கால்நடைகளுக்கும் இலவச காப்பீடு வழங்கிட வேண்டும். சங்கத்தின் பாலின் அளவு தரம் பரிசோதனை அடிப்படையில் ஒப்புகை சீட்டு வழங்கி பால் பணம் பட்டுவாடா செய்திட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோசங்கள் எழுப்பினர்.

மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT