தங்க நகை பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கொள்ளை!
தங்க நகை பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட மர்ம கொள்ளையர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடுதங்க நகை பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கொள்ளை!
தங்க நகை பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட மர்ம கொள்ளையர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
கோவை: தங்க நகை பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட மர்ம கொள்ளையர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
கோவை சண்முக நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவர் அப்பகுதியில் தங்க நகை பட்டறையில் அச்சு செய்வதற்காக 1067.850 கிராம் வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு கடையில் பணி புரியும் நோவா என்பவரிடம் கடை சாவியை ஒப்படைத்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் நோவாவிடம் இருந்து சாவியை திருடிய கொள்ளையர்கள் தங்கத்தை கொள்ளையடித்து சென்றதாக தகவல் கூறப்படுகிறது.
தங்கம் கொள்ளை போனதை குறித்து தங்கப்பட்டறை நகை உரிமையாளர் மோகன் வெரைட்டியால் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: திருப்பதியில் நிர்மலா சீதாராமன் வழிபாடு!
இக்கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மோகன் வெரைட்டியால் சாலை காவல் துறையினர், தங்க நகை திருடிய மர்ம கொள்ளையர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.