முகப்பு
தமிழ்நாடு

தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10,000 அபராதம்!

சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
கோப்புப்படம்
பகிர்:

சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: 

சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

அதேபோன்று ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

வாகன பந்தயங்களில் ஈடுபட்டாலோ, மாசு ஏற்படும் வகையில் வாகனங்களை இயக்கினாலோ ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

வாகன பர்மிட் இன்றி சென்றாலோ, தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தம் எழுப்பினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

பதிவின்றி வாகனம் இயக்கினால் ரூ.5,000  அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.