தமிழ்நாடு

தீபாவளி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! சென்னையில் 6 இடங்களில்....

DIN

தீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இன்று முதல் மூன்று நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி, இன்று(அக்.21) முதல் அக். 23 ஆம் தேதி சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4,218 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதன் மூலமாக மூன்று நாள்களுக்கு மொத்தம் 10,518 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், தாம்பரம் சானடோரியம், மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். 

இந்த மூன்று நாள்களில் பிற ஊா்களில் இருந்து 6,370 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

அதுபோல சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கு அக். 25 முதல் அக். 27 வரை மூன்று நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

அரசுப் பேருந்துகளில் பயணிக்க சென்னை கோயம்பேட்டில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் ஒரு மையமும் என 11 மையங்கள் வரும் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை செயல்படும். மேலும், முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடா்பாக புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகளின் இயக்கம் குறித்தும், புகாா் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம். மேலும், தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது உள்ளிட்ட புகாா்களுக்கு 1800 425 6151, 044 - 2474 9002, 044 - 2628 0445, 044 - 2628 1611 ஆகிய கட்டணமில்லாத தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம். பயணிகளின் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT