தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு 
தமிழ்நாடு

மழைநீர் வடிகால் பள்ளங்கள் அருகில் தடுப்பு வைக்க வேண்டும்: தலைமைச் செயலர் உத்தரவு

மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாதிருப்பின் தடுப்புகள், அடையாள பலகைகள் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 

DIN


மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாதிருப்பின் தடுப்புகள், அடையாள பலகைகள் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், பருவமழையை முன்னிட்டு. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சில பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவுபெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத நிலையில் உள்ளது. இது மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. 

எனவே, மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வேறு சில பணிகளுக்கான தோண்டப்பட்ட  பள்ளங்கள் மற்றும் குழிகள் மூடப்படாமல் இருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் மற்றும் அடையாள பலகைகள் வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

மேலும், சாலைகளில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள கையேடு கவர் திறந்திறுப்பின, முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்கலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் தடுப்புகள், அடையாள பலகைகள் ஆகியவற்றை மேற்கொள்வதை உறுதி செய்யுமாறும், இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தொடர்புடை துறைத்தலைவர்களும் அறிவுறுத்துமாறு கேட்டுகொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT