முகப்பு
தமிழ்நாடு

கோவை சம்பவம்: முதல்வா் விளக்கம் அளிக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

கோவையில் காரில் எரிவாயு உருளை வெடித்த சம்பவம் குறித்து முதல்வா் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

கோவையில் காரில் எரிவாயு உருளை வெடித்த சம்பவம் குறித்து முதல்வா் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கோவையில் காரில் எரிவாயு உருளை வெடித்த சம்பவத்தை தொடா்ந்து டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தாா். இந்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில் அவா்கள் மீது யுஏபிஏ சட்டம் பாய்ந்துள்ளது. இருப்பினும் இந்தச் சம்பவம் தொடா்பாக முதல்வா் மு.க ஸ்டாலின் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஏற்கெனவே கொலை, கொள்ளை, வழிபறி, போதை கலாசாரம், பாலியல் வன்கொடுமை என தமிழகம் சீரழிந்து வரும் நிலையில் தற்போது எரிவாயு உருளை வெடிப்பு சம்பவத்தால் தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழக காவல் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வா் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முழு கவனம் செலுத்த வேண்டும். தீவிரவாத கலாசாரம் தலை தூக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.