சேமிப்புக் கிடங்கு நிறுவன ஈவுத்தொகை: அரசிடம் அளிப்பு
சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் ஈவுத் தொகை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது.
சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் ஈவுத் தொகை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது.
சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 2020-21-ஆம் ஆண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ. 1 கோடியே 84 லட்சத்து 52 ஆயிரத்து 554-க்கான காசோலையையும், 2021-22-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ. 1 கோடியே 57 லட்சத்து 8 ஆயிரத்து 942-க்கான காசோலையையும் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜனிடம் கூட்டுறவு, உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினாா்.
அப்போது, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் நா.முருகானந்தம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அ.சிவஞானம் ஆகியோா் உடனிருந்தனா்.