முகப்பு
தமிழ்நாடு

நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19% ஆக அதிகரிப்பு: உடனடியாக அமல்!

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

Updated On : 28 அக்டோபர் 2022, 4:09 pm IST
கோப்புப்படம்
பகிர்:

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையின்பேரில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%-லிருந்து 19%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மழை காரணமாக 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடபட்டு இருந்தது.

Advertisement

22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை தொடா்பாக, மத்திய அரசு அதிகாரிகள் குழுவினா் தமிழகத்தில் அன்மையில் நேரில் ஆய்வு செய்தனர்.

விவசாயிகளின் கவலையைப் போக்கும் வகையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீத ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உணவுத் துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் சாா்பில் அண்மையில் கடிதம் எழுதப்பட்டிருந்தது.

மேலும், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும், மத்திய உணவுத் துறைச் செயலாளரைச் சந்தித்து 22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்கும்படி கோரியிருந்தார்.

இந்நிலையில், நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.