ஆளுநர் ஆர்.என்.ரவி 
தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 

DIN

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்ககளுக்கு தடை விதித்து ஏற்கெனவே அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார்.

அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் கடந்த அக். 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அரசிதழில் இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானபிறகு அமலுக்கு வரும் என்று தெரிகிறது. 

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு 3 மாத சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படும. சூதாட்டத்தை நடத்துபவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை கண்காணிக்க ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT