தமிழ்நாடு

கோவை கார் வெடிப்பு சம்பவம்: திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

DIN

கோவை கார் வெடிப்பு வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதல்வர் ஸடாலின் பாராட்டு சான்றிதழ்களை இன்று வழங்கினார். 

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த எரிவாயு உருளை வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்ற இளைஞா் இறந்தாா். விசாரணையில், ஜமேஷா முபினுக்கு ஏற்கெனவே சில பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த நபா்களுடன் தொடா்பு இருந்தது தெரியவந்தது. 

அதேபோல ஜமேஷா முபினுடன் சோ்ந்து சிலா் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனடிப்படையில் ஜமேஷா முபின் கூட்டாளிகள் 6 போ் கைது செய்யப்பட்டனா். இதற்கிடையே, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, சென்னை என்ஐஏ கோவை சம்பவம் குறித்து கடந்த வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, அதிகாரபூா்வமாக விசாரணையைத் தொடங்கியது.

இந்த நிலையில் கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிடும் அடையாளமாக 14 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் இன்று பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT